பாஜகவுக்கு போட்டியாக 'கஜக'.. தேசிய செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த எதியூரப்பா முடிவு!

இக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார், துணை முதல்வர் ஈஸ்வரப்பா, அமைச்சர்கள் சுரேஷ்குமார், கோவிந்த கர்ஜோல் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆனால், எதியூரப்பா இந்த கூட்டத்துக்கு செல்லவில்லை. அவர் பெங்களூர் கனகபுரா ரோட்டில் உள்ள ரவிசங்கரின் ஆசிரமத்திற்கு சென்று அங்கேயே தங்கிவிட்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள எதியூரப்பாவுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக எதியூரப்பா கட்சிக்கு விரோதமாக பேசி வருவதால் தேசிய தலைவர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தான் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்க்கும் எதியூரப்பா தனக்கு தலைவர் பதவியை வழங்காவிட்டால் கட்சியை விட்டு விலகவும் எதியூரப்பா திட்டமிட்டுள்ளார்.
ஹரியாணாவில் 3 நாட்கள் நடைபெறும் பாஜக கூட்டத்தில் கர்நாடக மாநில தலைவர் பதவி யாருக்கு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அவ்வாறு அறிவிப்பு வெளியாகி, தனக்கு பதவி கிடைக்காத பட்சத்தில் எதியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவை விட்டு விலகுவார் என்றும் கூறப்படுகிறது.
எதியூரப்பா பரபரப்பு பேட்டி:
இந் நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு எதியூரப்பா அளித்த பேட்டியில், மக்கள் எந்த வழியை காட்டுகிறார்களோ அந்த வழியில் நான் செல்வேன். நான் கடந்த 40 ஆண்டுகளாக கற்கள், முட்கள் நிறைந்த பாதையில் தான் நடந்து வந்துள்ளேன். என் தலைமையில் தேர்தலை சந்தித்து இந்த ஆட்சி அமைந்தது.
கர்நாடகத்தின் நிலம், நீர், மொழி ஆகியவற்றை காக்க நான் போராடி வருகிறேன். தொடர்ந்து போராடுவேன்.
கட்சியை விட எனக்கு மக்களின் நலன் தான் முக்கியம். 40 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்தேன். எனக்கு எதிரிகள் கட்சியில் தான் உள்ளனர். முதல்வர் பதவியில் இருந்து சதிசெய்து என்னை கீழே இறக்கினார்கள்.
எதற்காக அந்த பதவியில் இருந்து என்னை இறக்கினார்கள் என்று எங்கள் கட்சி தலைவர்கள் யாரும் விளக்கம் சொல்லவில்லை.
நாடாளுமன்றத்தில் என் பெயரை சொல்லி காங்கிரஸ் கட்சியினர் பேசும்போதெல்லாம் எங்கள் கட்சியை
சேர்ந்த எம்.பிக்கள் வாய்மூடி அமைதியாக உட்கார்ந்துள்ளனர். புள்ளி விவரங்களை எடுத்து சொல்லியிருக்க வேண்டியது தானே?. ஏன் அதை செய்யவில்லை?.
சட்டவிரோத சுரங்க முறைகேடு மூலம் பாஜகவின் மேலிட தலைவர்களுக்கு பங்கு போய் இருந்தால் அதுபற்றியும் விசாரணை நடத்தட்டும். தவறு நடந்திருந்தால் அது பகிரங்கமாகும் அல்லவா?.
வரும் டிசம்பர் மாதம் வரை மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்துகளை கேட்பேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி அடுத்தகட்டமாக முடிவு எடுப்பேன். இப்போதைக்கு பாஜகவில் தான் இருக்கிறேன். கட்சியில் இருப்பதா? வேண்டாமா? என்பது குறித்து டிசம்பர் மாதம் இறுதி முடிவு எடுப்பேன் என்றார்.
இந் நிலையில் கர்நாடக ஜனதா கட்சி (Karnataka Janata Party-KJP) என்ற பெயரில் கட்சியைத் தொடங்க எதியூரப்பா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
சுஷ்மா சுவராஜும் பங்கேற்கவில்லை..
அதே போல நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சுஷ்மா, டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications