Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீரப்பனை வீழ்த்திய கதை... ஒரு உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

veerappan
கோயம்புத்தூர்: தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு சவால்விட்டு வந்த சந்தனக் காட்டு வீரப்பனை சதி செய்து போலீஸ் கொலை செய்த கதையை உளவாளியாக செயல்பட்ட ஒருவர் ஜீனியர் விகடன் இதழ் மூலமாக ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார்.

கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் இளநிலைப் பணியாளராக பணிபுரியும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானாவாஸ் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:

நான் 10-ம் வகுப்பு முடித்த உடன் எங்கள் பகுதி போலீஸ் நண்பனாக இருந்தேன். உடுமலைப்பேட்டையில் பணிபுரிந்த போலீசார் வின்சென்ட், வீரப்பன் வேட்டைக்காக அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். அவருடன் நான் தொடர்பில் இருந்தேன். கோவை சிறையில் இருத வீரப்பன் அண்ணன் மாதையனை சந்திக்க கனகராஜ் என்பவர் அடிக்கடி வந்து செல்வார். அவர் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்.

தீவிரவாதிகளாக உளவாளிகள்

அவர் கோவை சிறைக்கு வந்தபோது அவரிடம் ஒரு கடிதத்தை போலீஸ் கைப்பற்றியது. அந்தக் கடிதத்தில் சிறையில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் மூலம் ஆயுதங்களைத் திரட்டுமாறு மாதையனுக்கு வீரப்பன் கோரியிருந்தார். இந்தக் கடிதம்தான் வீரப்பன் உயிருக்கே உலை வைத்தது. இந்தக் கடிதம் அதிரடிப்படை எஸ்.பி.யாக இருந்த செந்தாமரைக் கண்ணனிடம் ஒப்படைக்கப்படது.

வீரப்பன் தெரிவித்திருந்த யோசனைப்படி 4 முஸ்லிம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டோம். நான், கன்னியாகுமரியைச் சேர்ந்த அனஸ்கான், உபயத்துல்லா, உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜியாவுல் ஹக் ஆகியோர் இந்த உளவு வேலைக்கு தேர்வானவர்கள். எங்களுக்கு 3 மாதங்கள் ஆயுத பயிற்சி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் வீரப்பனிடம் போய் தீவிரவாதிகளாக நடந்து கொண்டு தகவல்களை சேகரிக்க சொன்னார்கள். நான் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு காவல்துறை உயர் அதிகாரியிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன். உளவு வேலையை சரியாக செய்தால் ரூ50 லட்சம் தருவதாக சொன்னார்கள்.

பிணைக் கைதியாக வீரப்பன் உறவினர் மகன்

பின்னர் வீரப்பன் உறவினரான கனகராஜிடம் விவரத்தை சொல்லி வீரப்பனிடம் கொண்டு சேர்க்கக் கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் வீரப்பன் மகனை பிணையாக வைத்துக் கொண்டு எங்களை வீரப்பனிட சேர்க்காவிட்டால் கொன்றுவிடுவேன் என்ற் மிரட்டி ஒப்புக் கொள்ள வைத்தார்.

2003-ம் ஆண்டு கனகராஜ் மூலம் வீரப்பனிடம் சேர்ந்தோம். மொத்தம் 20 நாட்கள் வீரப்பனிடம் தீவிரவாதிகளாக நடித்தே உளவு பார்த்தோம். வீரப்பனின் பலவீனங்கள், திட்டங்களை போலீசிடம் சொன்னோம். நாங்கள் சொன்ன தகவலை வைத்துதான் சிலர் பொடா சட்டத்தில் சிக்கினர். இந்த ஆபரேஷனுக்குப் பெயர் ககூன் (பட்டுக்கூடு). இந்த ஆப்பரேஷனை வைத்தே வீரப்பன் கொலை செய்யப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டு எங்களது பெயரை சொல்லாமல் ஜூனியர் விகடனுக்கு எஸ்.பி.யாக இருந்த செந்தாமரைக் கண்ணன் கூறியும் இருந்தார். ஆனால் எனக்கு சேர வேண்டிய தொகை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இது பற்றி காவல்துறை அதிகாரி செந்தாமரைக் கண்ணன் கூறுகையில், ''நாங்கள் நால்வரையும் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால், 50 லட்சம் ரூபாய் தருகிறோம் என்று எப்போதும் வாக்குறுதி கொடுக்கவில்லை. வேலை வாய்ப்புக்கு உறுதி கொடுத்திருந்தோம். அதை செய்து கொடுத்திருக்கிறோம்'' என்று சொல்லியிருக்கிறார் என்று ஜூனியர் விகடன் பதிவு செய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+