ஜெயலலிதா அரசியல் நாகரீகம் தெரிந்தவர், மனிதநேயம் மிக்கவர்: தா.பாண்டியன்
சென்னை: நாங்கள் தேர்லுக்காக மட்டும் கூடும் மலிவான அரசியல்வாதிகள் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தனது 80வது பிறந்தநாளை கடந்த 25ம் தேதி கொண்டாடினார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அதிமுக அவை தலைவர் மதுசூதனன், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை, தா.பாண்டியனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அனுப்பி வைத்தார். அவர்களும் தா.பாண்டியனை நேரில் சந்தித்து, முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக கட்சியின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12.25 மணியளவில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் நேராக அண்ணா நகர் முகப்பேரில் உள்ள தா.பாண்டியன் இல்லத்திற்கு முதல்வர் ஜெயலலிதா சென்றார்.
முதல்வர் ஜெயலலிதாவை வீட்டு வாசலில் தா.பாண்டியன் வரவேற்றார். அப்போது ஜெயலலிதா, நேற்று என்னால் வர முடியவில்லை. எனவே தான் இன்று நேரில் வந்து வாழ்த்த வந்தேன். என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றார்.
முதல்வரை வீட்டிற்குள் அழைத்து சென்ற பாண்டியன், குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது பேசிய ஜெயலலிதா, 80 வயது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மைல் கல் ஆகும். உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறி தா.பாண்டியனுக்கு பொன்னாடை போர்த்தினார்.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வீட்டிற்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தா.பாண்டியன் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்தார். தா.பாண்டியனின் குடும்பத்தாருடன் போட்டோ எடுத்து கொண்ட முதல்வர், மதியம் 12.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முதல்வர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது குறித்து கேட்டதற்கு தா.பாண்டியன் கூறியதாவது,
ஜெயலலிதா அரசியல் நாகரீகம் தெரிந்தவர், மனிதநேயம் மிக்கவர். தனக்கு பல வேலைகள் இருந்த போதும், தோழமை கட்சித் தலைவரான எனக்கு நேரில் வாழ்த்து சொல்ல வந்துள்ளார். இதன்மூலம் தமிழர்களின் பண்பாட்டிற்கு அவர் புகழ் சேர்த்துள்ளார். இந்த சந்திப்பில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை. கொள்கை, லட்சியம் அடிப்படையிலான, நட்புறவை வெளிப்படுத்தும் சந்திப்பு அவ்வளவு தான். தேர்தலுக்காக மட்டுமே கூட்டு வைக்கும் மலிவான அரசியல்வாதிகள் நாங்கள் அல்ல என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications