எழுத்தாளர்கள் விக்கிரமன், பொன்னீலனுக்கு ரூ. 2.5 லட்சம் இலக்கியப் பரிசு .. தினத்தந்தி வழங்குகிறது
சென்னை: தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் 108வது பிறந்த நாளையொட்டி 2 மூத்த தமிழறிஞர்களுக்கு நினைவு இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.
தினத்தந்தி நிறுவனர் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளையொட்டி ரூ.2.5 லட்சம் இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது. இதன்படி, மூத்த தமிழறிஞருக்கு ரூ.1.5 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு பரிசு பெறுவோர் விவரங்களை, 'தினத்தந்தி' இயக்குனர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அறிவித்துள்ளார். சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது, விக்கிரமனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது..
இந்த ஆண்டுக்கான 'சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு', எழுத்தாளர் பொன்னீலனுக்கு வழங்கப்படுகிறது. அவருடைய மறுபக்கம் என்ற நூலுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (ரூ.1 லட்சம்) வழங்கப்படுகிறது.
நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் சி.பா.ஆதித்தனாரின் 108-வது பிறந்த நாள் இலக்கிய பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் விழாவுக்கு தலைமை தாங்கி, விருதுகளை வழங்குகிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications