இரவிலும் முற்றுகையிட்ட கன்னட கட்சிகள் - எதிர்ப்பை மீறி தண்ணீரை திறந்துவிட்ட கர்நாடக அரசு
Subscribe to Oneindia Tamil

தமிழகத்துக்கு கர்நாடக அரசு எந்த நேரத்திலும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படக் கூடும் என்பதால் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள் நேற்று அணையை முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ புட்டராஜூ, எம்.எல்.சி. ஸ்ரீகண்டே கவுடா ஆகியோர் நேற்று மாலை முதல் போராட்டம் நடத்தி வந்தனர். பின்னர் இரவு 11.20 மணியளவில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர் போலீசார். ரிசர்வ் போலீசாரும் அணையின் முகப்பு பகுதியில் குவிக்கபப்ட்டார். அதற்கு முன்னதாக கன்னட ரக்ஷிக வேதிகே அமைப்பின் நாராயண கவுடா டார்ச்லைட் பேரணியை நடத்த முயன்றதால் தடுக்கப்பட்டார்.
இந்த எதிர்ப்பாளர்களை அப்புறப்படுத்திய பின்னர் நள்ளிரவில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications