திருவனந்தபுரத்தில் இந்தியாவிலேயே உயரமான கிறிஸ்து சிலை திறப்பு

இந்தியாவிலேயே உயரமான இயேசு கிறிஸ்து சிலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மார் பெசிலியோஸ் என்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 33.5 அடி உயரமுள்ள இந்த சிலையை மலகாரா சிரியன் கத்தோலிக்க தேவாலயத்தின் ஆர்ச் பிஷப் நேற்று திறந்து வைத்தார்.
இரண்டு கைகளையும் விரித்தவாறு வெள்ளை நிறத்தில் இருக்கும் இச்சிலையை புகழ்பெற்ற சிற்பி பிரேமசந்திரன் செதுக்கியுள்ளார். மார் பெசிலியோஸ் கல்லூரியில் படித்த மிதுன் மார்கோஸ் என்ற மாணவன் சாலை விபத்தில் சிக்கி பலியானார். அவரது பெற்றோரின் வேண்டுகோளின் பேரில் தான் சிலையை செய்ததாக பிரேமசந்திரன் தெரிவித்தார்.
பைபர், மெழுகு, ரெசின் உள்ளிட்டவற்றைக் கொண்டு செய்யப்பட்டுள்ள இந்த சிலைக்கு மார்பிள் பினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. 30 ஆட்கள் சேர்ந்து 35 நாட்களாக கடுமையாக உழைத்து இந்த சிலையை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications