டூவீலருக்கு வழிவிட முயன்று பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்-பலர் காயம்
கன்னங்குறிச்சி : சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே மோட்டர் பைக்கில் வந்தவர் விடாமல் ஹார்ன் அடித்து தொல்லை செய்ததால் அவருக்கு வழி விட முயன்ற மினி பஸ் எதிர்பாராமல் பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
கன்னங்குறிச்சி அருகே உள்ளது மூக்கனேரி. அங்கு மன்னார்பாளையம் செல்லும் பிரபு என்ற மினிபேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், ஹாரன் அடித்துக்கொண்டே வந்துள்ளார். குறுகிய சாலை இருந்ததால் வழிவிட முடியாமல் மினிபேருந்து டிரைவர் வந்துள்ளார். தொடர்ந்து ஹாரன் அடித்ததால், தொல்லை தாங்க முடியவில்லை என்று பேருந்தை சற்று ஓரமாக ஒதுக்கினார். அதில் நிலை தடமாறிய பேருந்து சரிந்து ஒரு பக்கமாக கவிழ்ந்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 17 பேர் லேசான காயம் அடைந்தனர்.
அப்பகுதி பொதுமக்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொக்லைன் மூலம் பேருந்தை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
இதற்கிடையே வழிகேட்டு பேருந்து டிரைவரை தொல்லை செய்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications