ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல் 14 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கனில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் கொள்ளப்பட்டனர் இதில் மூவர் அமெரிக்க படையை சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் ஆப்கனில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கடந்த 11 ஆண்டுகளாக முகாமிட்டுள்ளன. ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டையின் போது நடைபெற்ற சண்டையில் இருதரப்பினரும் கொல்லப்பட்டுள்ளனர். பின்லேடனின் மரணத்திற்குப் பின்னரும் ஆப்கனில் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்களும், தாக்குதல்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த தாக்குதல்களில் ஏராளமான நேட்டோ படை வீரர்கள் பலியாகின்றனர்.

இந்நிலையில் சையத் அபாத் மாவட்டத்தில் ஆப்கான் மற்றும் அமெரிக்க வீரர்களை நோக்கி சனிக்கிழமையன்று நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் பலியாயினர். இந்த தாக்குதலில் உயரிழந்தவர்கள் அமெரிக்க வீரர்கள் தான் என்பது உறுதியாகிறது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் மட்டும் 2000 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனிடையே திங்கட்கிழமையன்று இருசக்கர வாகனத்தில் வந்த தாலிபான் தீவிரவாதி நடத்திய குண்டுவெடிப்பில் 14 நேட்டோ படை வீரர்கள்பேர் கொல்லப்பட்டனர். இதில் மூன்று பேர் அமெரிக்க வீரர்கள் என்று அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. தாலிபன்களுடான போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும் வரும் 2014ஆம் ஆண்டுதான் அமெரிக்க படைகள் வெளியேற திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+