பிரச்சனைக்கு 'தீர்வு' காண வந்த அருண் ஜேட்லி.. சந்திக்காமல் ஊருக்குப் போய்விட்ட எதியூரப்பா!

Subscribe to Oneindia Tamil

Yeddyurappa
பெங்களூர்: கர்நாடகத்தில் நிலவி வரும் உள்கட்சிப் பிரச்சனைக்குத் தீர்வு காண பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி பெங்களூர் வந்தார். ஆனால், அவரை சந்திக்காமல் புறக்கணித்துவிட்டார் முன்னாள் முதல்வரான எதியூரப்பா.

எதியூரப்பாவுக்குப் பதிலாக அவரது ஆதரவு அமைச்சர்களான பசவராஜ் பொம்மை, ஷோபா கராந்லாஜே ஆகியோர் மட்டுமே அருண் ஜேட்லியை சந்தித்தனர். அப்போது எதியூரப்பாவுக்கு மாநில பாஜக தலைவர் பதவியை தந்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தனக்கு முதல்வர் பதவியை மீண்டும் தர வேண்டும் என்று கலாட்டா செய்த எதியூரப்பாவை சமாதானம் செய்ய முதல்வர் சதானந்த கெளடாவை மாற்றிவிட்டு எதியூரப்பா ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்ரவாக்கியது பாஜக தலைமை.

இந் நிலையில் தனக்கு பாஜக மாநிலத் தலைவர் பதவியைத் தர வேண்டும், இல்லாவிட்டால் கட்சியை விட்டு விலகுவேன் என்று மிரட்டி வருகிறார் எதியூரப்பா.

ஆனால், இதைத் தர பாஜக தலைமை தயாராக இல்லை. இந் நிலையில் எதியூரப்பா விவகாரம் குறித்துப் பேச அருண் ஜேட்லி பெங்களூர் வந்தார்.

முதல்வர் ஜெகதீஷ் ஷெடடார், துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, அசோக் மற்றும் அமைச்சர்களுடன் எதியூரப்பாவுக்கு கட்சித் தலைவர் பதவி வழங்குவது குறித்தும், அவர் கட்சியை விட்டு விலகினால் ஏற்படும் சாதக- பாதகங்கள் குறித்தும் கருத்துகளை கேட்டறிந்தார்.

எதியூரப்பா போனாலும் பரவாயில்லை, கட்சித் தலைவர் பதவியை அவருக்குத் தரக் கூடாது என்று இப்போதைய மாநிலத் தலைவரான ஈஸ்வரப்பா கூறினார்.

ஆனால், எதியூரப்பா போனால் பாஜகவும் காலியாகிவிடும் என்று முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறியதாகத் தெரிகிறது.

அதே போல கட்சியின் தேசியச் செயலாளரும் எதியூரப்பாவின் முக்கிய எதிரியுமான அனந்தகுமார் எம்.பியும் அருண் ஜேட்லியை சந்தித்தார். அவர் தனது ஆதரவாளரான பிரகலாத் ஜோஷியை மாநிலத் தலைவராக்கக் கோரியதாகத் தெரிகிகது.

ஆனால், ஜோஷி தலைவரானால் கட்சியை உடைப்பேன் என்று எதியூரப்பா தரப்பு மிரட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அருண் ஜேட்லியை எதியூரப்பாவும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷோபா, பசவராஜ் ஆகியோரை மட்டும் அனுப்பி வைத்த எதியூரப்பா தனது ஆதரவாளர்களான பிற அமைச்சர்கள் யாரையும் அருண் ஜேட்லியை சந்திக்க விடவில்லை.

இதையடுத்து எதியூரப்பாவை விரைவில் டெல்லிக்கு அழைக்த்து கட்சித் தலைவர் பதவி வழங்குவது குறித்து அவருடன் விவாதிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அருண் ஜேட்லியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

முன்னதாக ஜேட்லி பெங்களூருக்கு வந்தவுடன் எதியூரப்பா ஷிமோகாவுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். தன்னுடைய நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்ததால் செல்வதாவும், மேலும், தனக்கு கட்சியில் எந்த பதவியும் இல்லாததால் அவரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என்றும், அதே சமயம் அருண் ஜேட்லி மீது அன்பும், மதிப்பும் வைத்திருப்பதாகவும் எதியூரப்பா கூறினார்.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந் நிலையில் கட்சியின் மாநிலத் தலைவர் பதவி கிடைக்காவிட்டால் பாஜகவில் இருந்து விலகுவது குறித்து டிசம்பர் மாதம் இறுதி முடிவு எடுப்பேன் என்று எதியூரப்பா ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+