குஜராத்தில் டிசம்பர் 13, 17ல் இரு கட்டமாக சட்டமன்றத் தேர்தல், இமாச்சலில் நவ-4ல் தேர்தல்

இது தொடர்பான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இன்று வெளியிட்டார்.
இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாகவும், குஜராத்தில் டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் நடக்கும். இரு மாநில வாக்குகளும் டிசம்பர் 20ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் வெளியிடப்படும்.
குஜராத்தில் கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றார் பாஜக முதல்வர் நரேந்திர மோடி. அவர் இம்முறையும் வென்று ஹாட்ரிக் அடிப்பார் என பாஜக நம்புகிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் மிகவும் வலுவிழந்த நிலையிலேயே உள்ளது.
பாஜகவிலிருந்து பிரிந்து வந்த கேசுபாய் படேல் துவக்கியுள்ள தனிக் கட்சி பாஜகவின் ஓட்டுக்களைப் பிரித்து தங்களை ஓரளவுக்கு காப்பாற்றும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
குஜராத் சட்டமன்றத்தில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன. இதில் பாஜக கடந்த தேர்தலில் 117 இடங்களிலும் காங்கிரஸ் 59 இடங்களிலும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் 3.78 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம்...
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2007ம் தேர்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் தோற்றது.
68 இடங்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் பாஜக கடந்த தேர்தலில் 41 இடங்களிலும், காங்கிரஸ் வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்றன.
இந்த முறை எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக களமிறங்கியுள்ளது காங்கிரஸ்.
இந்த மாநிலத்தில் 45 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
முதல்வர் பிரேம் குமார் துமால் தலைமையில் பாஜகவும் முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையில் காங்கிரசும் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டன.
குஜராத்தில் இன்று தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிரச்சாரத்தைத் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications