புரட்டாசி.. பக்தர்களால் திணரும் திருமலை: கூடுதல் லட்டு கவுண்டர்கள் திறப்பு

திருமலை வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் கடந்த மாதம் 26-ந்தேதி நிறைவடைந்தது. வழக்கமாக பிரமோற்சவத்தின் போது தான் பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள். ஆனால் பிரமோற்சவம் முடிந்து 1 வாரம் ஆகிய நிலையில் கடந்த 3 நாட்களாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.
புரட்டாசி மாதம்
இது புரட்டாசி மாதம் என்பதால் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் திருமலைக்கு படையெடுத்துள்ளனர். மேலும் பள்ளிகளில் காலாண்டுத்தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சாமி தரிசனத்துக்கு 20 முதல் 22 மணி நேரம் ஆகிறது. லட்டு பிரசாதம் வாங்க கூட பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் லட்டு வாங்க வரிசையில் நிற்க நேரிட்டது. இதனால் கூடுதல் லட்டு கவுண்டர்களை திறக்க வலியுறுத்தி பக்தர்கள் சத்தம் போட்டனர்.
இதையடுத்து லட்டு பிரசாதம் வழங்க கூடுதலாக 27 கவுண்டர்கள் உடனடியாக திறக்கப்பட்டது. தரை தளத்தில் 15 கவுண்டர்களும், முதல் மாடியில் 12 கவுண்டர்களும் திறக்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட அதிக பக்தர்கள் வந்ததால் லட்டுகள் தயாரிக்கப்பட்டு உடனுக்குடன் விநியோகிக்கப்படுகிறது. லட்டுகள் ஈரப்பதமாக இருப்பதால் உடைந்து விடுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.












Click it and Unblock the Notifications