வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சல் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்-உயிர்சேதம் இல்லை
கவுகாத்தி: இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் இன்று காலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
அஸ்ஸாம் மாநிலத்தின் மத்திய பகுதியான ரங்கபுரா என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் என்று பதிவானது. அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இன்று அதிகாலையில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது, பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் சாலையில் குவிந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு சகஜ நிலை ஏற்பட்டதால் மக்களின் பயம் நீங்கி, வழக்கம் போல செயல்பட துவங்கினர். நிலநடுக்கத்தினால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications