Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நலிவடைந்த மக்களுக்கு குஜராத் அரசும் 9 சிலிண்டர்களை தரலாமே.. ஏன் தரவில்லை?: சோனியா

Subscribe to Oneindia Tamil

Sonia Gandhi
அகமதாபாத்: குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை இன்று பாஜகவின் கோட்டையான ராஜ்கோட்டில் தொடங்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. அப்போது பாஜகவை அவர் கடுமையாக சாடிப் பேசினார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் நரேந்திர மோடி துவக்கிவிட்டார். ஆனால், இதில் ராகுல் காந்தியை நேரடியாக இறக்கிவிடாமல் தவிர்த்து வருகிறது காங்கிரஸ்.

இந் நிலையில் சோனியா காந்தி இன்று தனது பிரச்சாரத்தைத் துவக்கினார். குஜராத் விவசாயிகள் கூட்டத்தில் அவர் இன்று உரையாற்றினார். சோனியாவின் இந்த வருகையை மனதில் வைத்துத் தான் இரு தினங்களுக்கு முன் அவரது மருத்துவச் செலவு விவரங்களைக் கேட்டு பிரச்சனை கிளப்பினார் மோடி.

ஆனால், இதற்கெல்லாம் சோனியா பதில் சொல்லவில்லை. மாறாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தே அவர் பொதுவாக பேசினார். மேலும் பாஜகவையும் அவர் விமர்சித்துப் பேசினார். அதேசமயம், நரேந்திர மோடி குறித்து அவர் நேரடியாக எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.

சோனியாவின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

இந்தப் பூமி மகாத்மா காந்தியுடன் தொடர்புடையது. எனவே இதை வணங்குகிறேன். தனது கொள்கைகளுக்கேற்றார் போல காங்கிரஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நாங்கள் நீண்ட நெடிய பாதையைக் கடந்து வந்துள்ளோம். இன்னும் போக வேண்டிய பாதை நீண்டதாகவே உள்ளது.

சிலர் கருமையான பகுதிகளை மட்டுமே பார்த்துப் பழகி விட்டார்கள். அவர்களால் எங்கள் மூலம் கிடைத்த வளர்ச்சி, செழுமையைப் பார்க்கத் தெரியாது. குஜராத்தின் வளர்ச்சிக்கு எங்களை விட யாரும் செய்திருக்க முடியாது. ஆனால் நாங்கள் செய்த பல நல்ல திட்டங்களை தங்களுடையது என்று சிலர் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் அப்படியே இருக்கட்டும், நாங்கள் தடுக்கப் போவதில்லை.

துரதிர்ஷ்டவசமாக நர்மதா நதி நீர் இன்னும் இந்த செளராஷ்டிர பகுதியை எட்டிப் பார்க்கவில்லை. இதை மக்கள் உணர வேண்டும். விவசாயிகளின் பிரச்சினை குறித்து அக்கறை காட்டுமாறு மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளின் தற்கொலை விவகாரத்தை மாநில அரசு கவனிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை அனுப்பி வைத்தால் நாங்கள் உரிய இழப்பீடு கொடுக்க வசதியாக இருக்கும். இதை செய்ய குஜராத் அரசு முன்வர வேண்டும்.

இப்பகுதி மீனவர்களின் பிரச்சினை குறித்து நான் அறவேன். அதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

குஜராத்தில் உள்ள பாஜக அரசு மாநில வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதியை விட 50 சதவீதம் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் இதை வேண்டுமென்றே மக்களுக்குத் தெரிவிக்க மறுத்து வருகிறது மாநில அரசு.

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்பது விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு உரிய விலையைப் பெற உதவும் நல்ல திட்டமாகும். இதில் இடைத் தரகர்களுக்கு இனி வேலையே இருக்காது. ஒரு முதல்வர் தனது மாநிலத்தில் அன்னிய முதலீடு வேண்டாம் என்றால் தனது மாநிலத்தில் அதைச் செய்து விட்டுப் போகட்டும். ஏன் மற்ற மாநிலங்களையும் அவர் கெடுக்க வேண்டும்.

நாம் இன்று 80 சதவீத பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறோம். 32 டாலராக இருந்த ஒரு பேரல் எண்ணெய் விலை இன்று 115 டாலராக உயர்ந்துள்ளது. நம்மால் என்ன செய்ய முடியும்.

மாநில அரசுகள் வாட் வரியைக் குறைத்தால் என்ன. அதை ஏன் அவர்கள் செய்ய முடியாது. நாட்டிலேயே குஜராத்தில்தான் வாட் வரி அதிகம்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களுக்கு கூடுதலாக 3 சிலிண்டர்கள் தருகிறோம். ஆனால் குஜராத்தில் இதை ஏன் பின்பற்றவில்லை, ஏன் பின்பற்றக் கூடாது.

ஊழல் குறித்து இன்று ஒட்டுமொத்த நாடும் கவலைப்படுகிறது. நாங்களும் கவலைப்படுகிறோம். இதனால்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தோம்.

யார் மீதெல்லாம் ஊழல் புகார்கள் சுமத்தப்படுகிறதோ அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஆனால் ஊழலுக்கு எதிராக பாஜக என்ன நடவடிக்கை எடுத்தது. பேசுவதற்கும், செயல்படுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது பாஜகவிடம்.

ராஜ்யசபாவில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற பாஜக தடையாக இருந்தது. ஏன் குஜராத்தில் லோக்பால் மசோதா இன்னும் வரவில்லை. 8 வருடங்களாக அதை ஏன் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராக பாஜக உண்மையாக இல்லை. அவர்களுக்கு காங்கிரஸை எதிர்ப்பது மட்டுமே உண்மையான நோக்கமாக இருக்கிறது என்றார் சோனியா காந்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+