காவிரி பிரச்சனையில் கன்னட அமைப்புகளின் போராட்டத்துக்கு ஆதரவு: முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்

Subscribe to Oneindia Tamil

Jagadish Shettar
பெங்களூர்: காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுவதை எதிர்த்து விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் நடத்தும் போராட்டத்துக்கு கர்நாடக அரசின் ஆதரவு உண்டு என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட பிறப்பித்த உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவால் காவிரியில் நீர் திறந்துவிட நேர்ந்தது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர் பசவராஜ் தலைமையிலான குழு டெல்லி சென்றுள்ளது. அங்கு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வர்.

தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தை கர்நாடக அரசு ஆதரிக்கிறது. எங்கள் அரசு கன்னடர்களுக்கான அரசு.

இரு மாநில அணைகளின் நீர் இருப்பு தொடர்பான உண்மை நிலையை அறிய மத்திய குழு வருகிறது. இதன்பிறகு எங்களுக்கு சரியான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+