கற்பழிக்கப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் தர வந்த பெண்ணிடம் மாஜிஸ்திரேட் அத்துமீறல்?!

Subscribe to Oneindia Tamil

பர்த்வான் (மேற்கு வங்கம்): பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் தர வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாஜிஸ்திரேட் மீது புகார் தரப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் நகரத்தில் 3வது நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்தப் பெண்ணே புகார் தந்துள்ளார்.

பர்த்வான் நகரைச் சேர்ந்த 35 வயதான அந்தப் பெண்ணை அவரது மாமனார் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் செப்டம்பர் 10ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவரை விஷம் வைத்துக் கொல்லவும் முயன்றார்.

இது குறித்து அந்தப் பெண் தந்த புகாரையடுத்து போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். இந்த வழக்கு பர்த்வான் நகர மூன்றாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வழக்குத் தொடர்பாக நேற்று அந்தப் பெண் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் தர அழைக்கப்பட்டார். அப்போது அந்தப் பெண்ணை மாஜிஸ்திரேட் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதாகவும் பெண்ணின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட நீதிபதியிடம் அந்தப் பெண் புகார் தந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+