குஜராத்தில் தேர்தலில் 133 இடங்களில் பாஜகவே வெல்லும்: சர்வே

50 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளை நரேந்திர மோடி தலைமையிலான பாக பெற்று பெரும் வெற்றியைப் பெறும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தை ஏற்கனவே முதல்வர் நரேந்திர மோடி தொடங்கி விட்டார். தற்போது 2வது முறையாக அவரது ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் 3வதாக அவர் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், லென்ஸ்ஆன்நியூஸ் சார்பில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் என்றும் அக்கட்சிக்கு மொத்த இடங்களில் 133 இடங்கள் கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி நிச்சயம் என்றும் அது கூறுகிறது. அதாவது காங்கிரஸுக்கு 43 இடங்களே கிடைக்கும் என்றும் அது கூறுகிறது. இது கடந்த 2007ல் அக்கட்சி பெற்ற இடங்களை விட 17 குறைவாகும். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்து 38 சதவீதமாகவே இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.
52 தொகுதிகளில் 7294 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
கடந்த தேர்தலை விட இந்த முறை ஒரு சதவீதம் அதிக சீட்களை பாஜக பெறும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதாவது கடந்த தேர்தலை விட 16 சீட்கள் பாஜகவுக்குக் கூடுதலாக கிடைக்குமாம்.
இந்த 16 சீட்களில் பெரும்பாலானவை நகர்ப்புறப்பகுதிகளிலிருந்து கிடைக்கலாமாம்.
நரேந்திர மோடிக்கு இணையான ஒரு தலைவர் காங்கிரஸில் இல்லாததே அக்கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட முக்கியக் காரணம் என்று கருத்துக் கணிப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பாஜகவிலிருந்து விலகியவரான முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலால் மோடிக்கும், பாஜகவுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
செப்டம்பர் 2ம் தேதி முதல் 28ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
ஹாட்ரிக் அடிப்பார் மோடி - பால் தாக்கரே
இதற்கிடையே, குஜராத் சட்டசபைத் தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, 3வது முறையாக ஆட்சியில் அமருவார் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத்தில் தனது பிடியை நன்கு வலுவாக வைத்துள்ளார் மோடி. அவர் 3வது முறையாக வெல்வது உறுதி. அவர் நிச்சயம் ஹாட்ரிக் அடிப்பார்.
கடந்த பத்து ஆண்டுகளில் அவர் மிகவும் விரைவான வளர்ச்சியை குஜராத்தில் கொண்டு வந்துள்ளார். இது நிச்சயம் யாராலும் முடியாத ஒன்றாகும். இந்த சாதனையே அவருக்கு மீண்டும் வெற்றியைத் தேடித் தரும்.
மோடியை முஸ்லீம்களை விழுங்கப் பார்க்கும் சாத்தான் போவும், அவர் முஸ்லீம்களுக்கு எதிரானவர் போலக் காட்டுவதும் தவறானது. குஜராத் கலவரத்திற்குப் பின்னர் மோடியை, மரணத்தின் வியாபாரி என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸால் 55 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் மோடி தலைமையிலான பாஜகவோ 121 இடங்களை வென்றது.
குஜராத்தில் பேச வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பேச்சில் ஒரு இடத்தில் கூட மோடியின் பெயரை உசசரிக்கவில்லை. ஒரு முறை கூட அவர் மோடி குறித்துப் பேசவில்லை. இதுவே காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை இப்போதே ஒத்துக் கொண்டு விட்டதற்கான அடையாளமாகும் என்றார் அவர்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications