காவிரி.. கர்நாடகத்தில் மத்திய குழு- அதிகாரிகளுடன் ஆலோசனை, இன்று அணைகளில் ஆய்வு

டெல்லியில் நடைபெற்ற காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் பிரதமர் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 9,000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திற்கு காவிரை நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.
இதை எதிர்த்து கர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இநதையடுத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் காவிரி அணைகளில் உள்ள நீர்மட்டம் மற்றும் மாநிலங்களுக்கு தேவைப்படும் நீரின் அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி. சிங் தலைமயில் வந்த ஒரு குழு நேற்று சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்தித்து ஆலோசனை நடத்தியது. பின்னர் மேட்டூர் அணைக்குப் புறப்பட்டுச் சென்றது.
அதே போல இன்னொரு குழு மத்திய விவசாயத்துறையின் உதவி கமிஷனர் பி.பி.பாண்டே தலைமையில் கர்நாடகம் வந்தது.
நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜேக்கப், நீர்வளத்துறை துணை இயக்குனர் டாக்டர் பி.கே.ஷா, நீர்வளத்துறை இயக்குனர் டி.ரெங்காரெட்டி ஆகியோர் அடங்கிய இந்த மத்தியக் குழு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரெங்கநாத் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசியது.
தமிழகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பின் மத்திய குழுவின் அதிகாரியான டி.வி.சிங் இன்று பெங்களூர் வந்து இந்த குழுவினருடன் சேர்ந்து கொள்வார்.
கர்நாடகம் வந்துள்ள குழுவினர் இன்று கே.ஆர்.எஸ், கபினி ஆகிய அணைகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பேச்சு நடத்துகிறார்கள். ஆய்வு பணியை முடித்துக் கொண்டு இன்று இரவு இந்த குழுவினர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.
இந்தக் குழுவினர் டெல்லி சென்று அடுத்த 4 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications