அரசு நிலம் ஆக்கிரமிப்பு: கேரள அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் மலையாள வேதி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ளார். இவர் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இடுக்கி மாவட்டம் நாடுகாணி பகுதியில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட 75 ஏக்கர் நிலம் உள்ளது. இதை நீர்பாசன துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் பினாமி பெயரில் ஆக்கிரமித்து உல்லாச விடுதி கட்டி உள்ளார்.
இதற்கு முன்னாள் வருவாய்துறை அமைச்சர் இஸ்மாயில் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து ஏற்கனவே விஜிலென்ஸ் கமிஷன் விசாரணை நடத்தி அறிக்கையில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உண்மை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் ஜோசப், முன்னாள் அமைச்சர் இஸ்மாயில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இது குறித்து அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications