முல்லைப் பெரியாறு- ஐவர் குழு அறிக்கையில் திருத்தம் கோரும் கேரள கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பலம் தொடர்பாக ஐவர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ள கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் வாதங்கள் நவம்பர் 5-ந் தேதி தொடங்க உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் பாதுகாப்பு தொடர்பான ஆராய அமைக்கப்பட்ட ஐவர் குழுவின் அறிக்கையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜெயின், லோதா , டட்டு, பிரசாத் மற்றும் டேவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி, ஐவர் குழுவின் அறிக்கையில் சில தவறுகள் உள்ளன. இதனால் அதில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார். தமிழக அரசின் தரப்பிலோ முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக வாதிடப்பட்டது.
இருத்ராப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
ஐவர் குழுவானது பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகே அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. இதில் திருத்தம் மேற்கொள்ள கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் அனுமதி கிடையாது. இப்படிச் செய்தால் இந்த வழக்கில் வாதத்தையே தொடங்க முடியாமல் தாமதமாகும். இருதரப்பும் தங்களது கருத்துகளை வாதங்களின் போது தெரிவிக்கலாம். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 5-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications