அக்.8ல் மீண்டும் அணு உலை முற்றுகைப் போராட்டம்: கூடங்குளத்தில் பதற்றம்

கூடங்குளம் அணுமின் இயங்கினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி கடந்த 14 மாதங்களுக்கும் மேலாக இடிந்தகரை பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் கடல்வழியாக அணு உலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பாதுகாப்பு தீவிரம்
இதற்கிடையே அணுமின்நிலையத்தின் முதலாவது அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்பட்டு மின்உற்பத்தி தொடங்குவதற்காக ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் வருகிற 8-ந்தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல்வழியாக படகுகளில் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அணு உலை எதிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் கூடங்குளம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அணுமின்நிலையத்திற்குள் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு அங்கு கூடுதலாக 200 மத்திய பாதுகாப்பு படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளம் தோண்டி மக்கள்
முற்றுகை போராட்டத்தை முறியடிப்பதற்காக போலீசார் எந்தநேரமும் இடிந்தகரைக்குள் நுழையலாம் என்ற அச்சம் கிராம மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதனிடையே சுனாமி காலனி பகுதியில் ரோட்டின்நடுவே 2 பெரிய குழிகளை போராட்டக்காரர்கள் தோண்டியிருக்கிறார்கள். இதனால் இடிந்தகரை கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
7000 போலீசார் வருகை
கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகிணறு, தாமஸ் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முற்றுகை போராட்டத்திற்காக கூடுதலாக 6000 போலீசார் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றனர்.
கூடுதல் போலீசார் ஞாயிறன்று கூடங்குளம் வருகின்றனர். இவர்களை தவிர தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கடலோர காவல்படை போலீசார் நவீன ரோந்து படகுகளில் கூடங்குளம் வருகின்றனர். தென்மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் தலைமையில் நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர். கடந்த முறை முற்றுகைப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடியில் ஒருவர் உயிரிழந்தார். இந்த முறை போராட்டத்தை முற்றிலும் ஒடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் இன்றிலிருந்தே பதற்றநிலை உருவாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications