இடிந்தகரைக்கு போலீசார் வருவதை தடுக்க சாலையில் பள்ளம் தோண்டிய பொக்லைன் ஓட்டுநர் கைது
கூடங்குளம்: கூடங்குளம் அணு உலையை திங்கள்கிழமையன்று கடல்வழியே முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதன் ஒருபகுதியாக இடிந்தகரையில் போலீஸ் நுழைவதைத் தடுக்கும் வகையில் சாலையில் பள்ளம் தோண்டியதாக பொக்லைன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது திங்கள்கிழமையன்று கடல்வழியே அணு உலையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் போது இடிந்தகரை கிராமத்துக்குள் போலீசார் நுழைவதைத் தடுக்கும் வகையில் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. இந்தப் பள்ளங்களைத் தோண்டியதாக பொக்லைன் ஓட்டுநர் மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். சாலையை சேதப்படுத்தியதற்கு உடந்தையாக இருந்த போராட்டக் குழுவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
கடல் வழியே சென்று 8-ந் தேதியன்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர காவல்படையின் ரோந்து படகுகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கூடங்குளம் பகுதியில் மீண்டும் பதற்றமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications