60 வயசு புதினின் வசீகரத்தில் மயங்கிப் போகும் ரஷிய பெண்கள்
Subscribe to Oneindia Tamil

லெவாடா என்ற நிறுவனம் அண்மையில் ஒரு சர்வே நடத்தியது. ரஷியா நாடு முழுவதும் மொத்தம் 2 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் ஐந்து பெண்களில் ஒருவர் ரஷிய அதிபர் புதினை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளனர். புதினின் ஆளுமையும் நிர்வாக திறனுமே தங்களை கவர்ந்திழுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷிய பெண்கள் இப்படி சொல்வது புதிதும் அல்ல! 2004-ம் ஆண்டு புதினைப் பற்றிய பாப் ஆல்பம் வெளியிட்ட பெண் ஒருவர், புதினைப் போன்ற கணவர் வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதில் பெருங்கொடுமை என்னவெனில் புதினுக்கு எதிராக ரஷியாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பதுதான்! என்னதான் போராட்டம் நடந்தாலும் செம ஆள் புதின்தான் என்கிற ரஷிய பெண்களை பார்த்து என்னவென்று சொல்வது?












Click it and Unblock the Notifications