ஆட்சியை காப்பாற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்கும் மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

Parliament
டெல்லி: மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால் மைனாரிட்டி அரசாகிவிட்ட மத்திய அரசு, குஜராத்-இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், வழக்கமாக நவம்பர் 3வது வாரம் தொடங்கி டிசம்பர் இறுதி வரை நடைபெறும். இந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி இமாசலர் பிரதேசத்திலும், டிசம்பர் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன.

சில்லறை வணிகம், பென்ஷன், காப்பீடு ஆகியவற்றில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் விஷயத்தில் மத்திய அரசில் இருந்து விலகிய மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், குளிர் கால கூட்டத் தொடரில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அத்துடன் மத்திய அரசின் இிந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆளும் கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் முலாயம் சிங், மாயாவதி ஆகியோரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறி வருகின்றனர்.

இத்துடன் மம்தா கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று பாஜகவும் அறிவித்துள்ளது.

இதனால் முலாயம் சிங், மாயாவதி ஆகியோர் கைவிட்டால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிச்சயமாக வெல்லும், அரசும் கவிழும்.

இதைத் தவிர்க்க நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரையே ஒத்தி வைத்துவிட்டு மேலும் 2 மாதங்களை ஓட்டிவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம் நிருபர்கள் கேட்டபோது, குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் தேதி குறித்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். இந்த ஆலோசனை முடிவடையும்வரை, குளிர்கால கூட்டத் தொடர் தேதி குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று எஸ்கேப் ஆனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+