காஷ்மீர் சட்டசபைக்குள் நுழைந்து இளைஞர்கள் கோஷம்.. பரபரப்பு
ஸ்ரீநகர்: பலத்த பாதுகாப்பையும் மீறி ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்குள் புகுந்து மூன்று இளைஞர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சட்டசபை காவலர்கள் விரட்டிச் சென்று பிடித்து அப்புறப்படுத்தினர்.
இன்று காலை சட்டசபைக் கூட்டம் தொடங்கியதும் 3 இளைஞர்கள் சட்டசபைக்குள் புகுந்தனர். அங்குள்ள பப்ளிக் காலரிக்குள் புகுந்த அவர்கள் கோஷமிட்டபடி கையில் இருந்த கொடிகளையும் ஆட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை அரங்குக்குள் நுழையவும் அவர்கள் முயன்றனர். இதைப் பார்த்து உள்ளே இருந்த சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது மூவரில் ஒருவர் சபையின் மையப் பகுதியை நோக்கி விரைவாக ஓடினார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவரை சட்டசபை காவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.
மூன்று பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து அறை ஒன்றில் அடைத்து விசாரணை நடத்தினர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தருமாறு சபாநாயகர் அக்பர் லோனே உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications