இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை படையினருக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்று தமிழகக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ராஜாராமன் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி தரக்கூடாது என்றும் இந்தியாவில் பயிற்சி அளிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குளாக்குகிறார் என்று கடிந்து கொண்டனர். மேலும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications