தண்ணீர் திறப்பு உத்தரவை மறு பரிசீலனை செய்யுங்கள் - பிரதமருக்கு கர்நாடகா கோரிக்கை

கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான கர்நாடக குழு இந்த மனுவை இன்று அளித்துள்ளது.
எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் டெல்லியில் பிரதமரை முற்றுகையிட்டு கடும் பிரஷர் கொடுத்து, அங்கு என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ, பிரதமர் அவர்களிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை, இறுதியில், நேற்று இரவோடு இரவாக தமிழகத்திற்குத் திறந்து விடப்பட்ட காவிரி நீரை நிறுத்தி விட்டது கர்நாடக அரசு.
இந்த நிலையில்தான் பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையத்திடம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மறுபடியும் மனு செய்துள்ளது கர்நாடகா.
தண்ணீர் திறப்பு முடிவை மறு பரிசீலனை செய்ய பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையத்தால் மட்டுமே முடியும் என்று உச்சநீதிமன்றம் நேற்று கூறியதன் அடிப்படையில் இந்த புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது கர்நாடகா.
இதுகுறித்து நேற்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், நாளை -அதாவது இன்று - காவிரி நீர் அணையத்தில் கர்நாடக அரசின் மனு சமர்ப்பிக்கப்படும். பிரதமர் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதில் கோரவுள்ளோம். எங்களிடம் தண்ணீர் இல்லை. இதுதான் எங்களது நிலை. பிரதமரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து முடிவைத் தெரிவிப்போம் என்று கூறியிருந்தார்.
அதன்படி முதல்வர் ஷெடட்ர் தலைமையில் கர்நாடக குழுவினர் இன்று பிரதமரை நேரில் சந்தித்து இந்தப் புதிய மனுவைக் கொடுத்தனர்.
செப்டம்பர் 19ம் தேதி தமிழகத்திற்கு விநாடிக்கு 9000 கன அடி நீர் வீதம் அக்டோபர் 15ம் தேதி வரை காவிரியில் நீர் விட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார். இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் கர்நாடகம் தொடர்ந்து இதில் பிடிவாதம் செய்து, முரண்டு பிடித்து, பிரதமருக்கே நெருக்கடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications