கருணாநிதிக்கு சனி திசை வந்திருக்கு, அதான் கருப்புக்கு மாறிட்டார்.. அமைச்சர் கோகுல இந்திரா
Subscribe to Oneindia Tamil

சிவகங்கையில் அதிமுக அரசின் சாதனை குறித்த பிரசாரத்தை துவக்கி வைத்து பேசிய அவர், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதில், முதல்வர் ஜெயலலிதா, புதிய யுக்தியை கடைபிடிக்கிறார் என்றார். கடந்த திமுக, ஆட்சியில் நடந்த கிரானைட் ஊழல் மூலம், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை மீட்டு, கிரானைட் ஊழல்களை வெளியே கொண்டு வந்து உள்ளார்.
நாட்டை பொருளாதார சீரழிவுக்கு கொண்டு சென்றவர், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தான். திமுக, கூட்டணி வைத்துள்ள காங்., ஆட்சிபுரியும் மத்திய அரசு தான், மக்களை பாதிக்கின்றன வகையில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலைகளை கடுமையாக உயர்த்தி வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications