5 ஆண்டுகளில் தடையில்லா மின்சாரம் வழங்க முடிவாம்: சொல்கிறார் பிரதமர்

டெல்லியில் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமும், மத்திய வர்த்தக கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்தார். மாநாட்டில் பிரதமர் பேசியதாவது:
கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள 19 கோடி வீடுகளில், 12 சதவீத வீடுகளில் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு பயன்படுத்தப்படுகிறது. நாட்டில் உள்ள 24 கோடி வீடுகளுக்கும் ஆண்டுக்கு தலா 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்க, 2.5 கோடி டன் எரிவாயு மட்டுமே தேவை. இது சமாளிக்கக் கூடியதுதான். இருப்பினும், கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க சற்று காலம் தேவைப்படும். தகுதியுள்ள மக்களுக்கு மட்டுமே மானியம் கிடைப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு வகுத்து வருகிறது. இதன் மூலம், மின்சாரத்தையும் சமையல் எரிவாயுவையும் அவர்கள் சலுகை விலையில் வாங்கி பயன்படுத்த முடியும்.
நாட்டில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் நாள் முழுவதும் மின்சாரம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் எல்லா வீடுகளுக்கும் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 2 கோடி வீடுகளுக்கு 2022,ம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றார்.
கர்நாடகாவில் உள்ள மைசூர் மாவட்டத்தில் மானிய விலையிலான 27 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வீட்டில் உள்ளவர்களிடம் பயோ,மெட்ரிக் அடையாளத்தின் மூலம் வெற்றிகரமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, வங்கி கணக்கு மூலம் மானிய தொகை வழங்கப்படும் இவ்வாறு பிரதமர் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications