மாயாவதி 'பல்டி'.. மத்திய அரசின் 'பியூஸை' பிடுங்குவது குறித்து பின்னர் முடிவாம்!
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து பின்னர் அறிவிப்பேன் என்று கூறிவிட்டார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.
முன்னதாக இன்றே இது குறித்து அறிவிக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், பின்னணியில் என்ன நடந்ததோ தெரியவில்லை தனது முடிவை ஒத்தி வைப்பதாகக் கூறிவிட்டார்.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்த்து, கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் சமீபத்தில் வெளியேறிவிட்டது. இதனால் 19 எம்பிக்களை இழந்து மத்திய அரசு மைனாரிட்டி அரசாகிவிட்டது.
ஆனால், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.
இந் நிலையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முலாயமும் மாயாவதியும் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மம்தாவோ அல்லது பாஜகவோ நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், முலாயமும் மாயாவதியும் அதை ஆதரித்துவிட்டால், மன்மோகன் சிங் அரசு வீட்டுக்குப் போக வேண்டியது தான்.
ஆனால், மம்தா அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர மாட்டார், கொண்டு வந்தாலும் அதை முலாயமும் மாயாவதியும் ஆதரிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தினந்தோறும் ஏதாவது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்த வண்ணம் உள்ளது.
இந் நிலையில் நேற்று லக்னொவில் தனது கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி,
மத்திய அரசுக்கு ஆதரவைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து புதன்கிழமை (இன்று) நடக்கும் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
மேலும் இப்போதுள்ள நிலையில் மத்தியில் விரைவிலேயே தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து மாயாவதியை சமாதானப்படுத்தும் வேலைகளை நேற்றே மத்திய அரசு ஆரம்பித்துவிட்டது. அவருடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். அவர் மீது சில வழக்குகளும் உள்ளன, அவற்றை சிபிஐ விசாரித்தும் வருகிறது.
இந் நிலையில் முடிவை ஒத்தி வைப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications