சென்னையில் கடத்தப்பட்ட 9-ம் வகுப்பு மாணவன் ஆந்திராவில் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணத்திற்காக கடத்தப்பட்ட சென்னை ஐசிஎஃப் பள்ளி மாணவன் ஆந்திர மாநிலத்தில் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அயனாவரம் ஐ.சி.எஃப். ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி லிடியா. இவர்களது மகன் சுதிர் (14). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். திங்கள்கிழமை காலை சுதிர் வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றான்.

இந்நிலையில் அவரை பின் தொடர்ந்து சென்ற ஒரு கும்பல் சுதிரை காரில் கடத்திச் சென்றது. இது குறித்து தகவலறிந்த லிடியா, ஐ.சி.எஃப். காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுதிரின் தந்தை சுரேஷ், சிலருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியிருப்பதும், ஏமாந்த நபர்கள் பணத்துக்காக சுதிரை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கடத்தி சென்றிருப்பதும் தெரியவந்தது.

மேலும், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி தரும் வரை மாணவனை விடுவிக்க மாட்டோம் என சுதிரை கடத்திய கும்பல் தொலைபேசி மூலம் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தனராம். இதனையடுத்து மாணவனை மீட்க தனிப்படை போலீசார் நெல்லூர் சென்றனர்.

ஆந்திராமாநிலம் ஓங்‌‌கோல் பகுதியில் மாணவன் சுதிர் இருப்பதை கண்டறிந்த தமிழக போலீசார் உடனடியாக மீட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+