பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ் அனுப்பினால் 3 ஆண்டு சிறை- மத்திய அரசு பரிசீலனை

பெண்களை மோசமாக சித்திரிப்பது, ஆபாசமாக காட்டுவது, இழிவுப்படுத்தும் வகையில் நடத்துவது போன்ற குற்றங்களுக்கு கடந்த 1986ம் ஆண்டு தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போது செல்போன்கள் மற்றும் இணையதளம் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு ஆபாசமான எம்.எம்.எஸ் மற்றும் இமெயில் அனுப்புதல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்க, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான மத்திய சட்ட அமைச்சரகத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை, பெண்கள் நல அமைச்சரகம் அனுப்பியுள்ளது.
இதன்படி பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ், இமெயில் அனுப்புவோருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க வேண்டும். பொது இடத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் அவர்களின் உடல்பகுதியோ, கேலி சித்திரமே வெளியிடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்.
அதேபோல பத்திரிக்கை துறை மற்றும் விளம்பர துறையை சேர்ந்தவர்களும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் படங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை குறித்து மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை செய்ய உள்ளதாக தெரிகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரகம் அளித்துள்ள பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று கொண்டால், இது தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications