தமிழக பேரவை வைரவிழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு- விரைவில் சபாநாயகர் டெல்லி பயணம்?

தமிழக சட்டப்பேரவையின் 60-வது ஆண்டு நிறைவு விழா வரும் 29-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தற்போது மாற்றப்பட்டுள்ளது. வரும் 29-ந் தேதி போர் நினைவுச் சின்னம் அருகே வைரவிழா வளைவுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டுவார் என்றும் நவம்பர் 30-ந் தேதி வைரவிழா நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரவிழாவில் குடியரசுத் தலைவரை பங்கேற்கச் செய்வதற்காகத்தான் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற தனபால் விரைவில் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை நேரில் அழைப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றதைப் போல பேரவையின் வைரவிழா நிகழ்ச்சியிலும் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி கலந்து கொள்வார் என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்!












Click it and Unblock the Notifications