அசிங்கம் பிடித்த 'ஈபி' என்ஜீனியர்... 5 மணி நேர ஆபாச சிடி பறிமுதல்!

Subscribe to Oneindia Tamil

Subramaniam
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் விடுதிகளில் தங்கும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்துக் கைதான மின்வாரிய என்ஜீனியர், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை இது போல ரகசியமாக படம் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடமிருந்து 5 மணி நேரம் ஓடக் கூடிய வீடியோ கிளிப்பிங்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வால்பாறையை அடுத்துள்ள காடம்பாறை அட்டகட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியம் (56). பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் இவர் செய்த அசிங்கமான காரியத்தால் மின்வாரியமே தலைகுணியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தனது அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த கண்ணம்மாள் என்பவருக்கு இந்த சுப்பிரமணியம் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கப் போக பொங்கி எழுந்தார் கண்ணம்மாள். அவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து தற்போது சுப்பிரமணியம் கைதாகியுள்ளார். அவரது அசிங்க லீலைகளும் அம்பலத்திற்கு வந்துள்ளன.

சுப்பிரமணியம் இதற்கு முன்பு பில்லூரில் மின்வாரிய கட்டுமானப்பிரிவு என்ஜினீயராக வேலை பார்த்தார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர் மின்சாரவாரிய அலுவலக மாளிகை, என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் உல்லாசபுரியாக இருந்துள்ளது. பல பெண்களை அழைத்து வந்து அங்கு உல்லாசமாக இருந்துள்ளார்.

பில்லூர் பகுதியில் மலைவாழ் பெண்கள் அதிக அளவில் உள்ளனர். மலைவாழ் பெண்கள் வசிக்கும் பகுதிக்கு அடிக்கடி சென்று வந்த சுப்பிரமணியன், மலைவாழ் பெண்கள் குளிக்கும் பகுதியில் சிறிய காமிராவை பொருத்திவிட்டு சென்று விடுவார்.

பின்னர் இரவில் வந்து அந்த காமிராவை எடுத்துச் செல்வார். இவ்வாறு நீண்டநாட்களாக வெவ்வேறு இடங்களில் காமிராவை பொருத்தி இளம்பெண்கள் நிர்வாணமாக குளிப்பதை படம் பிடித்துள்ளார். பின்னர் இந்த படங்களை, நண்பர்களுடன் சேர்ந்து வீடியோவில் போட்டு பார்த்து ரசித்து வந்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவிகள் சிலரை புரோக்கர்கள் மூலம் பில்லூருக்கு அழைத்து சென்று சுப்பிரமணியம் உல்லாசமாக இருந்ததுடன் அந்த ஆபாச காட்சிகளை வீடியோ காமிரா மூலம் பதிவு செய்தும் வைத்துள்ளார். இதேபோல வால்பாறையில் உள்ள பல்வேறு விடுதிகளிலும் கூட இந்த சுப்பிரமணியம் கேமராவைப் பொருத்தி பெண்களைப் படம் பிடித்துள்ளார்.

சுப்பிரமணியத்தின் ஆபாச வலையில் குடும்ப பெண்கள் உள்பட பலரும் விழுந்துள்ளனர். மேலும் தான் உல்லாசமாக இருக்கும் பெண்களையும் படம் பிடித்து மிரட்டி, மீண்டும், மீண்டும் அனுபவித்துள்ளார்.

அவரிடம் இருந்து கைப்பற்றிய சி.டிக்கள், லேப்-டாப்பில் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடைய ஆபாச படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஓடக் கூடியதாம்.

சுப்பிரமணியம் தனது மனைவியுடன் ஒழுங்காக குடும்பம் நடத்தவில்லை. அவருடைய அசிங்கமான முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி, 8 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து போய் விட்டாராம். இந்த்த தம்பதிக்கு 2 மகன்களும் உள்ளனர்.

ஆபாச செயல்களுக்காகவே அதி நவீன காமராவையும் வாங்கி வைத்திருந்தாராம் சுப்பிரமணியம். சம்பளம் முழுவதையுமே பெண்களுடன் உல்லாசமாக இருக்க மட்டுமே செலவு செய்துள்ளார் இந்த வித்தியாசமான மனிதர். பெண் ஊழியர் கண்ணம்மாளிடம் கூட இவர் மிரட்டிப் பார்த்துள்ளார். ஆனால் அவர் பயப்படாமல் துணிச்சலுடன் புகார் கொடுத்ததால்தான் சுப்பிரமணியத்தின் காம லீலைகள் முடிவுக்கு வந்துள்ளன.

தற்போது சுப்பிரமணியத்தை மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+