பாஜக தலைவர் கட்காரிக்கு எதிராகவும் போர் தொடங்கிய கெஜ்ரிவால்!
டெல்லி: அடுத்து தனது அஸ்திரத்தை பாஜக தலைவர் கட்காரி பக்கம் திருப்பியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
காந்தி பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்தடுத்து அதிரவலைகள் கிளப்பி வருகிறார்.

ஆனால் தாம் யாருக்கும் ஆதரவானவர் இல்லை என்பதை விளக்கும் வகையில், பா.ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரிக்கு எதிரான தகவல்களை கெஜ்ரிவால் வெளியிட உள்ளார்.
இதுபற்றி கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பரும், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் உறுப்பினருமான அஞ்சலி தமானியா நாக்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நிதின் கட்காரி பற்றிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்துள்ளேன். இதுபற்றிய விவரங்களை நானும் கெஜ்ரிவாலும் இணைந்து வரும் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம்' என்றார்.
அஞ்சலி தமானியா, மகாராஷ்டிராவில் அணைகள் மற்றும் கால்வாய்கள் கட்டுவதில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு நடந்த முறைகேடு நடந்ததை கடந்த மாதம் தெரியப்படுத்தினார்.
அதன்பின்னர் நிருபர்களிடம் கூறிய அஞ்சலி, என்னை கட்காரி தரப்பினர் சந்தித்து, சரத்பவாருடன் கட்காரி வர்த்தக தொடர்பு வைத்திருப்பதால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சேகரித்த தகவல்களை கோர்ட்டுக்கு கொண்டு போகக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர் என்றார்.
ஆனால் அஞ்சலியை சந்திக்கவில்லை என்று கூறிய கட்காரி, அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications