இடிந்தகரை செல்ல முயன்ற 11 பேர் கைது- நக்சல் ஆதரவாளர்கள் என்று 'பகீர்' தகவல்

கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி இடிந்தகரை பகுதி மக்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கடந்த மாதம் 10ம் தேதி நடந்த அணுஉலை முற்றுகை போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது.
போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கும்பலை கலைத்தனர். இதில் இருத்தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் நக்சல் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சேலம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில அமைப்பை சேர்ந்தவர்களும், இடிந்தகரை சென்று போராட்டத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து உவரி மற்றும் கடற்கரை கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் இடிந்தகரை செல்கிறார்களா என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஜெயாபிரின்ஸ் மற்றும் போலீசார் டோல்கேட் பகுதியை கடந்து வந்த ஒரு பஸ்சில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்சில் உண்மை கண்டறியும் என்ற பெயரில் இடிந்தகரைக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 பேர் செல்வது தெரியவந்தது. இவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து நெல்லை சரக டிஐஜி சுமித்சரண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜேயந்திர பிதாரி, கியூ பிரிவு துணை சூப்பிரண்டு சந்திரபால் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது அவர்களில் சிலர் நக்சல் ஆதரவு தீவிரவாதிகள் என்ற திடுக் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த குழுவில் இருந்த 11 பேரையும் கைது செய்தனர். அவர்களில் 7 ஆண்களை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், 4 பெண்களை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் கிளை சிறையிலும் அடைத்தனர்.
கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பெயர் விபரம் வருமாறு,
1. கேசவன்(35) மதுரை
2. அகராதி(25) மதுரை
3. ஜெகன்(24) அண்ணாநகர், மதுரை
4. பழனிசாமி(48) கரூர்
5. கமின்(43) அயோத்தியா நகர், ஆந்திரா
6. தங்தகீர்(24) கடப்பா, ஆந்திரா
7. அரவிந்த் கே.ஆர்.ஆலினாஸ்(50) ஜார்க்கண்ட்
8. தாமோரார்(33) ஜார்க்காண்ட்
9. வரலட்சுமி(30) ஆந்திரா
10. பிரதிமாதாஸ்(30) கோடவாஸ், ஓரிசா
11. பிரியா, கிழக்கு கைலாஸ், டெல்லி
இதில் கேசவனும், அகராதியும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களும் மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவரும் மக்கள் உரிமை புரட்சி குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
பழனிசாமி ஏகாதிபத்திய இயக்கத்தின் மாநில செயலாளராக உள்ளார். டெல்லி சேர்ந்த பிரியா ஜவஹர்லால் பல்கலை கழக மாணவி. மேலும் நக்சல் ஆதரவு இயக்கத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications