டெங்குவிலிருந்து தப்ப முழுக்கை சட்டை போடுங்க: ஒரு அமைச்சரின் அட்வைஸ்
சென்னை: டெங்கு காய்ச்சலை பரப்பக் கூடிய கொசுக்களை ஒழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமோ, டெங்குவிலிருந்து தப்பிக்க இதுதான் வழி என்று மாணவர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தமிழகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 5 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. போதிய விழிப்புணர்வு, வழிமுறைகள் மூலம் இக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தலாம். மாணவர்கள் முழுக் கை சட்டை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டும். கொசு உற்பத்தியாகும் சூழலைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களில் சுகாதாரம் பேணுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் கொசு ஒழிப்பு மருந்துகளைத் தெளிக்க வேண்டும் என்றார் அவர்
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் விகிதம் 2 மடங்காக அதிகரித்துள்ளது.
தென் மாநிலங்களில் கடந்த ஆண்டில் 2,859 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு (12,500 பேர்) உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை டெங்கு காய்ச்சலால் 33 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 77 பேர் வரை இறந்துள்ளனர் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications