டெங்கு காய்ச்சல் சாவுகளை மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது ஜெ அரசு - கருணாநிதி

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
அவரிடம் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்தான தீர்ப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "திமுகவினர் மீதான தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது என்பது தெளிவாகிறது," என்று சூசகமாகக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தீவிரமாக உள்ளது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, "தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது. அமைச்சர்களும் அந்தப் பல்லவியையே பாடுகிறார்கள். டெங்கு காய்ச்சலால் யாரும் சாகவில்லை என்று நேற்று வரையிலே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது காய்ச்சல் தீவிரமாக பரவி, பல உயிர்களை மாய்த்திருக்கின்ற காரணத்தால் மத்திய சர்க்காருடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களே, தமிழகத்திற்கு வந்து அதில் அக்கறைக் காட்டிச் சென்றுள்ளார்," என்றார்.
மின்வெட்டு குறித்து...
"தமிழகத்தில் மின்வெட்டு அடுத்த ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார். மின்வெட்டு காரணமாக நாள்தோறும் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறதே?" என்று செய்தியாளர் கேட்டதற்கு, "தி.மு.க. ஆட்சியின்போது மின்வெட்டினைப் பற்றி ஒன்றிரண்டு செய்திகள் வரும்போதெல்லாம், தோள்தட்டிக் கோபமாகப் பேசிய அந்த அமைச்சர்; அப்போது தி.மு.க. ஆட்சியை பலமாக கண்டித்த அந்த அமைச்சர்; இப்போது மின்சார குறைபாட்டுக்கு திரை போட்டுக் கொண்டிருக்கிறார்," என்று பதிலளித்தார் கருணாநிதி.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications