வேலூர் சிறையிலிருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை- மு.க.ஸ்டாலின், கனிமொழி நேரில் வரவேற்பு
Subscribe to Oneindia Tamil

சேலம் அங்கம்மாள் காலனி குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது உள்ளிட்ட வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வீரபாண்டி ஆற்முகம் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை வேலூர் சிறையில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார். அவரை சிறைவாசலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.












Click it and Unblock the Notifications