பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 16 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 16 பேர் பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தாரா ஆடம் கேல் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் அரசு சார்பு பேராளிகள் அமைப்பின் அலுவலகம் உள்ளது. தற்கொலை படையை சேர்ந்த நபர் ஒருவர் இன்று, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை இந்த அலுவலகத்திற்குள் ஓட்டி சென்றார்.

அப்போது தற்கொலை படையை சேர்ந்த நபர் ஓட்டி வந்த வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தாலிபன்களுக்கு எதிராக போராடி வரும் பாதுகாப்பு வீரர்கள் உட்பட 16 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும்

2 குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த 20 கடைகள், 8 கார்கள் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், அருகில் பெஷாவாரில் உள்ள லேடி ரிடீங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+