கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்: பீதியில் சாலைகளில் குவிந்த பொதுமக்கள்
மங்களூர்: கர்நாடகாவின் குடகு, ஹாசன், உடுப்பி, மங்களூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை உணர்ந்த பொதுமக்கள் பீதியில் சாலைகளில் குவிந்தனர். ஆனால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
கர்நாடக மாநிலத்தின் ஹாசன், குடகு, தட்சினகன்னடா, மங்களூர், உடுப்பி ஆகிய மாவட்டங்களில் நேற்று பிற்பகல் 2.30 மணி லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. சில நொடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தில் பீதியடைந்த பொதுமக்கள், சாலைகளில் குவிந்தனர்.
வீடுகள், கடைகளில் இருந்த பொருட்கள் அசைந்ததை பார்த்ததாக மக்கள் தெரிவித்தனர். குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, சித்தாபுரா, சுண்டிகொப்பா, பெட்டள்ளி, அரேகாலு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
சிக்மகளூர் டவுன், அனுமந்தப்பா சர்க்கிள் பகுதியிலும் சுமார் 2 வினாடிகள் அதிர்வு ஏற்பட்டது. ஹாசன் மாவட்டத்தில் ஹாசன் டவுன், சக்லேஸ்புரா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால், வீடுகளில் இருந்தவர்கள், பீதியில் சாலைகளுக்கு ஓடி வந்து தஞ்சமடைந்தனர்.
அதேபோல கடற்கரை மாவட்டங்களான உடுப்பி, தட்சினகன்னட மாவட்டம் மங்களூர், புத்தூர், சுள்ளியா ஆகிய இடங்களிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டதை, புவியியல் நிபுணர்களும் உறுதி செய்தனர். 3.9 ரிக்டர் அளவு பதிவானதாக அவர்கள் தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications