சல்மான் குர்ஷித்துக்கு காங்கிரஸ் ஆதரவு- ராஜினாமா செய்ய மாட்டார்?

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்குவதும் நெருக்கடி முற்றிய நிலையில் ராஜினாமா செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. ஆ.ராசா, தயாநிதி மாறன், வீரபத்ரசிங் என்ற இந்தப் பட்டியலில் இப்பொழுது சல்மான் குர்ஷித்தும் இடம்பெற வேண்டிய நிலை உள்ளது.
சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவியும் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு போலி ஆவணங்கள் மூலம் நிதிபெறப்பட்டதாக சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும் சல்மான் குர்ஷித்தை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுதி வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சல்மான் குர்ஷித், அறக்கட்டளை விவகாரத்தில் என் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்யத் தயார் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று முற்பகல் பிரதமர் மன்மோகன்சிங்கை மனைவி சகிதமாக சல்மான்குர்ஷித் சந்தித்துப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.. இதனால் அனேகமாக தமது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சல்மான் குர்ஷித் கொடுக்கக் கூடும் என்று கூறப்பட்டது.
ஆனால் சல்மான் குர்ஷித்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வரிந்து கட்டத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு சாதாரண மனிதர் மீது புகார் தெரிவிக்கப்பட்டால் நிச்சயம் கோபம்வரத்தான் செய்யும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் வக்காலத்து வாங்கியிருக்கிறார். இதனால் சல்மான் குர்ஷித் ராஜினாமா செய்வாரா? என்பது சந்தேகமாகி இருக்கிறது.
இந்தியா டுடே குழுமம் உறுதி
மேலும் சல்மான் குர்ஷித் அவரது மனைவி லூயிஸ் ஆகியோரின் அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் தொடர்பாக இந்தியா டுடே குழும தொலைக்காட்சியில் ஆதாரங்களுடன் செய்தி ஒன்றை வெளியிட்டது. இதற்கு சல்மான் குர்ஷ்த் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் தாங்கள் ஒளிபரப்பிய விசாரணை செய்தியில் எந்த தவறும் இல்லை என்று இந்தியா டுடே குழுமம் உறுதிபட தெரிவித்திருக்கிறது. எமது செய்தியில் நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சல்மான் குர்ஷித் உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் அக்குழுமத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications