சொத்து குவிப்பு வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி ஆஜர்
விழுப்புரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும், விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இவ்வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் செம்மண் குவாரி மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 6ம் தேதி, பொன்முடி கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அங்கு பொன்முடிக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து பொன்முடி திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந் நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக அவரது மனைவி விசாலாட்சியும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வழக்கின் குற்ற நகல் பொன்முடிக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு நீதிபதி கயல்விழி வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று பொன்முடி ஆஜராவது குறித்து அறிந்த திமுக தொண்டர்கள் ஏராளமானோர், நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications