கிரானைட் விவகாரம்: பிஆர்பி குடும்பத்தினர் உட்பட 8 பேருக்கு பிடிவாரன்ட்!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள பி.ஆர்.பி. அதிபர் பழனிச்சாமியின் உறவினர்கள் உட்பட 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு செய்தது தொடர்பாக இதுவரை 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் பி.ஆர்.பி கிரானைட் அதிபர் பழனிச்சாமி உள்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பல குவாரி அதிபர்கள், பங்குதாரர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமியின் உறவினர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்க கோரி தனிப்படை டி.எஸ்.பி தங்கவேல், மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெய்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில்,
பி.ஆர்.பழனிச்சாமியின் மனைவி செல்வி, மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், சகோதரி மகன்கள் தெய்வேந்திரன், முருகன் என்ற முருகேசன், மருமகன் மகாராஜன் ஆகியோர் உள்பட மொத்தம் 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவித்தார்.
அதேபோல பிஆர்பி அதிபர் பழனிச்சாமியின் காவலை நீட்டிக்க கோரி, நேற்று மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். போலீசாரின் கோரிக்கை ஏற்ற நீதிபதி, வரும் 29ம் தேதி வரை பழனிச்சாமியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications