For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சரவையில் ராகுல்?- ஜனாதிபதி-- பிரதமருடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Rahul Gandhi
டெல்லி: விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ள மத்திய அமைச்சரவையில் ராகுல்காந்தியும் இடம்பெறக் கூடும் என்று மீண்டும் பரபரப்பு தொற்றியிருக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங்கை ராகுல்காந்தி இன்று திடீரென சந்தித்ததால் இந்த பரபரப்பு உருவாகியிருக்கிறது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் நேற்று தனித்தனியே சந்தித்துப் பேசினர். இதையடுத்து மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

அப்போது, ராகுலுக்கு நெருக்கமான சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா போன்ற இளம் இணையமைச்சர்கள், கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்துவிட்டு அமைச்சரவை மாற்றத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் இன்று முற்பகல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கையும் ராகுல்காந்தி சந்தித்துப் பேசினார். இதனால் நிச்சயமாக ராகுல் காந்திக்கு அரசாங்கத்தி; பெரிய அளவிலான ஒரு பொறுப்புக்கு வாய்ப்பு இருக்கிறது என்று 'மீண்டும்' கூறப்படுகிறது.

English summary
A day after Prime Minister Manmohan Singh and Congress president Sonia Gandhi met President Pranab Mukherjee, Congress general secretary Rahul Gandhi is likely to head to Rashtrapati Bhavan amid talks of an impending cabinet reshuffle. Rahul seeking time with the President is important as it comes amid reports that he will take up greater responsibilities in the affairs of the party and government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X