வெளிநாட்டு நன்கொடை: ஊழல்னு வந்துட்டா என்னா ஒரு ஒற்றுமை நம்ம பாஜகவுக்கும் காங்கிரசுக்கும்!

இந்த விவகாரத்தில் வருமான வரித்துறையின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட இந்தியரான அகர்வாலுக்குச் சொந்தமான சர்வதேச நிறுவனமான வேதாந்தா குழுமத்திடம் இருந்து இரு கட்சிகளும் தலா ரூ. 5 கோடி நன்கொடை பெற்றுள்ளன.
இந்த நிறுவனத்திடம் இருந்து நேரடியாக இந்தப் பணம் பெறப்படவில்லை. இந்தியாவில் செயல்படும் அக்குழுமத்தின் துணை நிறுவனங்களான ஸ்டெர்லைட், சீசா கோகோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இரு பெரிய கட்சிகளும் நன்கொடை பெற்றுள்ளன.
முதல் கட்ட விசாரணையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29பி பிரிவை இந்த இரு கட்சிகளும் மீறியுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்திய அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து பணம் பெறக்கூடாது என்பது விதி. இதை இரு கட்சிகளும் மீறியுள்ளதால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. அதில் அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது.
லண்டனில் வேதாந்தா குழுமம் வெளியிட்ட, தனது 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அரசியல் கட்சிகளுக்கு ரூ.28 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்திடமிருந்தே காங்கிரஸ், பாஜக ஆகியவை பணம் பெற்றதாக ஆகிறது. ஸ்டெர்லைட், சீசா கோகோவிடம் தான் வாங்கினோம் என்று இந்த இரு கட்சிகளும் சமாளிக்க முடியாது.
இது தொடர்பாக பாஜக, காங்கிரஸ் இரண்டுமே பெரும் அமைதி காத்து வருகின்றன.
ஊழல்னு வந்துட்டா என்னா ஒரு ஒற்றுமை நம்ம பாஜகவுக்கும் காங்கிரசுக்கும்!
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications