சென்னையில் சவ ஊர்வலத்தை தடுத்ததால் இரு பிரிவினரிடையே மோதல்-பதற்றம்: போலீஸ் தடியடி
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் சவ ஊர்வலத்தை தடுத்ததால் இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
அதிமுக பிரமுகர் சாவு..
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் வேலு (55) மரணமடைந்தார். மைலாப்பூர் சுடுகாட்டுக்கு இவரது உடலை அங்குள்ள பி.எம்.தர்கா தெரு வழியாக தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
ஆனால், அந்தத் தெரு வழியாக சவ ஊர்வலம் செல்ல நீதிமன்றத் தடை உத்தரவு இருப்பதாகவும், இதனால் இந்த தெரு வழியாக சவ ஊர்வலம் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், 40 ஆண்டு காலமாக இந்தத் தெரு வழியாகவே சவ ஊர்வலம் செல்கிறோம் என்று கூறி, சவத்துடன் செல்ல முயன்றனர் இன்னொரு பிரிவினர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவல் அறிந்த போலீசார் அங்கு குவிந்தனர்.
துணை கமிஷனர்கள் புகழேந்தி, பவானீஸ்வரி, சரவணன், உதவி கமிஷனர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. இரு தரப்பினரையும் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன.
இதில் 3 போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். போலீசார் சிலரை விசாரணைக்காக பிடித்துச் சென்றனர்.
அதன் பிறகு வேறு பாதை வழியாக வேலுவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications