தூத்துக்குடியில் சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சிறுமியை பலத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே.சண்முகபுரம் காலனியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் பொன்னியம்மாள். கடந்த 24.4.2005 அன்று வீட்டிற்கு முன் சிறுமி விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகன் முத்துவேல் என்பவர் அங்கு வந்தார். சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று அங்குள்ள காட்டு பகுதியில் வைத்து பலாத்காரம் செய்தார்.
இது குறித்து ஒட்டபிடாரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்தார். இது குறித்து அப்போதைய பெண் இன்ஸ்பெக்டர் தங்கவள்ளி வழக்கு பதிவு செய்து முத்துவேலை கைது செய்தார்.
இந்த வழக்கு கோவில்பட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மலர்மதி சிறுமியை பலாத்காரம் செய்த முத்துவேலுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சத்து 54 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராத தொகையில் ரூ.1லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவி்ட்டார்.












Click it and Unblock the Notifications