தலைக்காவிரியில் தீர்த்தோத்பவா விழா.. தமிழக பக்தர்கள் அடியோடு 'மிஸ்ஸிங்'!
தலைக்காவிரி: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரியில், நடந்த வருடாந்திர தீர்த்தோத்பவா விழாவின்போது தமிழகத்திலிருந்து பக்தர்கள் வருகை மிக மிக குறைந்து காணப்பட்டது.
ஆண்டுதோறும் தலைக்காவிரியில் தீர்த்தோத்பவா என்ற நிகழ்ச்சி நடைபெறும். இதில் தமிழகத்திலிருந்தும் பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. ஆனால் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் இருந்தது.
தமிழகத்திற்குக் காவரி நீரைத் தருவதில்லை என்று கர்நாடக அரசு முரண்டு பிடித்து வருகிறது. இதற்காக தமிழகத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வந்தனர். இதன் காரணமாகவே இந்த ஆண்டு விழாவுக்கு தமிழக பக்தர்கள் வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை விட தமிழக மக்கள்தான் அதிக அளவில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மைசூர், மாண்டியா மாவட்ட மக்களும் கூட இந்த முறை அதிக அளவில் இங்கு வரவில்லை.
மேலும் இந்த முறை அன்னதான நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்து விட்டது. மிகவும் குறைந்த அளவிலேயே அன்னதானம் வழங்க வேண்டும் என அது உத்தரவிட்டிருந்தது. இதனால் இங்கு வழக்கமாக அன்னதானம் வழங்கும் தமிழகத்தைச் சேர்ந்த செட்டியார் சமூக குடும்பம் ஒன்றும், கன்னட அமைப்பு ஒன்றும் இந்த முறை பெரும் ஏமாற்றத்தை சந்தித்தன. இதுவும் கூட கூட்டம் குறைந்து போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications