'எமர்ஜென்சி' காலத்தை போல் மத்திய அரசு செயல்படுகிறது: பாஜக குற்றச்சாட்டு!
சென்னை: இந்திரா காந்தியின் ஆட்சியின் போது அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி காலத்தை போல் தற்போது மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டி உள்ளார்.
இது குறித்து சேலத்தில் பாஜக தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
சேது சமுத்திர திட்டத்தை புராதன சின்னமான ராமர் பாலத்தை இடிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதை பாஜக வரவேற்கிறது.
மத்திய அரசு தனது மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கொடுத்து வந்தது. ஆனால் தற்போது அதை நிறுத்துவிட்டது. மத்திய அரசு, அரசியல் நடத்துவதை விட்டுவிட்டு மக்கள் நலன் கருதி தமிழகத்திற்கு மின்சாரத்தை வழங்க வேண்டும்.
தமிழக அரசும் மத்திய அரசை நம்பி இருக்காமல் மின் உற்பத்தியை ஏற்படுத்த புதிய மின் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உடனே மின்சார உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எப். நிறுவனத்திற்கும் இடையே நடந்த நில பரிமாற்றம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட அதிகாரியை, ஹரியானா அரசு மாற்றி உள்ளது.
இந்திரா காந்தியின் ஆட்சியின் போது எமர்ஜென்சி காலத்தில் நடந்தது போல், தற்போது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மீண்டும் அந்த அதிகாரியை அதே துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு? என்றார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications