மிஸ்டர் கெஜ்ரிவால்! சரத்பவார் குடும்ப ஊழலை ஏன் சொல்லலை?

கத்காரி மீது புகார்
மகாராஷ்டிரா மாநில நீர்ப்பாசனத் திட்டத்தில் பாஜக தலைவர் நிதின் கத்காரிக்கு தொடர்பிருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல் மகாராஷ்டிரா மாநில அரசு விதிகளை மீறி 100 ஏக்கர் நிலத்தை கத்காரிக்கு கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.
கெஜ்ரிவால் மீது திரும்பிப் பாய்ந்த அஸ்திரம்
ஆனால் இந்த முறைகேடுகளில் மட்டுமின்றி மத்திய அமைச்சர் சரத் பவார் குடும்பத்தினரின் ஏராளமான முறைகேடுகள் தொடர்பாக தாம் கொடுத்த ஆதாரங்களை படுலாவகமாக மூடி மறைத்துவிட்டார் கெஜ்ரிவால் என்று போட்டு உடைத்திருக்கிறார் அவரது முன்னாள் சகாவான ஒய்.பி.சிங்.
கெஜ்ரிவாலிடம் ஒய்.பி.சிங் கொடுத்த சரத்பவார் குடும்பத்தினரின் முறைகேடுகள் என்ன?
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் லவாசாவில்341 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகள் லீசுக்கு லேக் சிட்டி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு வழங்கினார். இதற்கு மாத வாடகையாக ரூ23 ஆயிரம் மட்டும் வசூலிக்கப்பட்டடு இந்த நிறுவனத்தில் சரத்பவாரின் மகள் சுப்ரியாவுக்கும் அவரது கணவர் சதானந்தாவுக்கும் 20.81 விழுக்காடு பங்குகள் இருக்கின்றன. 2006-ம் ஆண்டு இருவரும் தங்களது விற்பனை செய்கின்றனர். 2008-ம் ஆண்டு தனியார் வங்கி ஒன்று இருவரது பங்கு மதிப்பும் ரூ10 ஆயிரம் கோடி என மதிப்பிட்டிருக்கிறது. இந்த 341 ஏக்கர் நிலமும் விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு பலவந்தமாக பறிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒய்.பி.சிங்கின் புகார். இது தொடர்பான ஆதாரங்களை கெஜ்ரிவாலிடம் கொடுத்திருந்தேன். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் இதனை மறைத்துவிட்டார் என்கிறார் ஒய்.பி.சிங்.
கெஜ்ரிவால் மறுப்பு
ஆனால் இதனை கெஜ்ரிவால் நிராகரித்திருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்டோர் எங்களுக்கு தகவல் தருகின்றனர். அதில் மிகச் சரியானதை மட்டும்தான் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்றார்.
இதனிடையே பிரசாந்த் பூஷன், அஞ்சலி தமனியா மற்றும் மயாங்க் காந்தி ஆகியோர் மீது சிலர் கூறும் புகார்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழு விசாரணை நடத்தும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications